கொடூர கோபத்தில் சனி.. விரட்டி அடி விழும் ராசிகள்.. உக்கர பார்வையில் சிக்கிக்கொண்ட ராசிகள்-here we will see the rasis who are caught in the wrath of lord saturn - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொடூர கோபத்தில் சனி.. விரட்டி அடி விழும் ராசிகள்.. உக்கர பார்வையில் சிக்கிக்கொண்ட ராசிகள்

கொடூர கோபத்தில் சனி.. விரட்டி அடி விழும் ராசிகள்.. உக்கர பார்வையில் சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 10:04 AM IST

சனிபகவானின் கோபத்தில் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

Saturn Transit
Saturn Transit

சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்வார்கள் இது இவருடைய சொந்த ராசியாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் குடியேறியுள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார் சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சனி பகவானின் உக்கிர பார்வை சில ராசிகள் மீது விழுகின்றது. தொடர்ந்து பத்து மாத காலம் சனி பகவானின் உக்கர பார்வை நீடிக்கும். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சனிபகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். காரியத்தில் தடைகளை உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பத்து மாத காலம் உங்களுக்கு மோசமான சூழ்நிலையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து காரியங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி

 

சனி பகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சனிபகவானின் உக்கிர பார்வை உங்கள் மீது விழுகின்றது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்படும். சுய ஒழுக்கம், மற்றும் பொறுப்பு, நீண்ட கால திட்டமிடல் உள்ளிட்டவைகள் அனைத்தும் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். அதனால் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.

கும்ப ராசி

 

உங்களுக்கு ஏழரை சனிகள் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் கோபப்பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 10 மாத காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner