Guru Pongal: குரு நேர் பாதை தொடங்கியது.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Pongal: குரு நேர் பாதை தொடங்கியது.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Guru Pongal: குரு நேர் பாதை தொடங்கியது.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 04:46 PM IST

குருபகவான் ராஜயோகத்தை தரப்போகும் ராசிகளை எங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

அந்த வகையில் மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குருபகவான் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். மிகப்பெரிய போராட்டத்தில் இருந்து தப்பித்து சுதந்திர வாழ்க்கை உண்டாகும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து உறவு வலுவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உடனடியாக நிவர்த்தி அடைய வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். அலட்சியமாக இல்லாமல் செயல்பட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner