Guru Transfer: குரு புரட்டப் போகும் 3 ராசிகள்.. சம்பவம் உறுதி
Guru Transfer,: குருபகவானால் சிக்கலை சந்திக்கப்போகும் ராசிகளின் இங்கே காண்போம்.
நவக்கிரகங்களில் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான சொர்க்க வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
குருபகவான் எந்த ராசிக்கும் அதிகபட்ச துன்பத்தில் கொடுக்க மாட்டார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது ஆனால் குரு பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் அசுப சூழ்நிலைகளை பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.
தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், வரும் மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இன்னும் மூன்று மாதங்களில் தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவான் இந்த இடமாற்றத்தால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
கன்னி ராசி
குரு பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய தருணமாக இது அமையும். நல்ல காரியங்கள் செய்வதை சற்று தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை முடித்த சற்று தாமதமாகும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி
குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தற்போது சாதகமாக இல்லை. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வயிறு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும். சூழ்நிலை உண்டாகும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
குடும்ப உறவில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. குருபகவான் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் விளையாட தயாராகி விட்டார். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க சற்று தாமதமாகும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9