தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Raku Ketu Nakshatra: ராகு கேதுவால் பணமழை பெற போகும் நட்சத்திரங்கள்

Raku Ketu Nakshatra: ராகு கேதுவால் பணமழை பெற போகும் நட்சத்திரங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 17, 2023 01:03 PM IST

ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற போகும் நட்சத்திரங்கள் குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அந்த வகையில் கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் வரும் அக்டோபர் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதனால் சில நட்சத்திரங்கள் நற்பலன்களை பெற போகின்றனர் அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

புனர்பூசம்

 

ராகு கேது உன்னிடம் மாற்றம் ஆனது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய நபர்களின் நட்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

ஆயில்யம்

 

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர போகின்றது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. மனரீதியாக மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் .சிக்கல்களில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது.

பூசம் நட்சத்திரம்

 

அற்புதமான யோகத்தை இந்த ராகு கேது பெயர்ச்சியில் நீங்கள் பெறப்போகின்றீர்கள். சனி பகவானை அதிபதியாகக் கொண்ட நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்