Lord Kubera: குபேரன் பணத்தை அள்ளிக் கொட்டும் ராசிகள்.. அவருக்கு நெருக்கம் இவர்கள்தான்.. பண குளத்தில் குதிக்கப்பது உறுதி-here we will see the most favorite zodiac signs of lord kubera - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Kubera: குபேரன் பணத்தை அள்ளிக் கொட்டும் ராசிகள்.. அவருக்கு நெருக்கம் இவர்கள்தான்.. பண குளத்தில் குதிக்கப்பது உறுதி

Lord Kubera: குபேரன் பணத்தை அள்ளிக் கொட்டும் ராசிகள்.. அவருக்கு நெருக்கம் இவர்கள்தான்.. பண குளத்தில் குதிக்கப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 01:44 PM IST

Lord Kubera: வாழ்க்கைக்கு மிகவும் தேவை பொருளாதார முன்னேற்றம், நிதி நிலைமையில் சிறப்பான சூழ்நிலை, பண யோகம் ஆகும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக திகழ்ந்து வருபவர் குபேரன். குபேரனின் ஆசிர்வாதம் இருந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

குபேரன் பணத்தை அள்ளிக் கொட்டும் ராசிகள்.. அவருக்கு நெருக்கம் இவர்கள்தான்.. பண குளத்தில் குதிக்கப்பது உறுதி
குபேரன் பணத்தை அள்ளிக் கொட்டும் ராசிகள்.. அவருக்கு நெருக்கம் இவர்கள்தான்.. பண குளத்தில் குதிக்கப்பது உறுதி

நவகிரகங்களின் அடிப்படையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் கடவுள்களின் ஆசிர்வாதத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். பல்வேறு விதமான யோகங்களை பெற்றிருந்தாலும் கடவுள்களுக்கு குறிப்பிட்ட ராசிகளின் மீது அதீத அன்பு இருக்கும்.

வாழ்க்கைக்கு மிகவும் தேவை பொருளாதார முன்னேற்றம், நிதி நிலைமையில் சிறப்பான சூழ்நிலை, பண யோகம் ஆகும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக திகழ்ந்து வருபவர் குபேரன். குபேரனின் ஆசிர்வாதம் இருந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. அந்த வகையில் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நினைப்பது சாதிக்கக் கூடியவர்கள் தங்களுடைய இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். வேலையை முடித்த பின்னரே அவர்களுக்கு மன நிம்மதி ஏற்படும். சுக்கிரனின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வரக்கூடியவர்கள். நினைத்த காரியத்தை முடிக்க கூடியவர்கள் சுக்கிரன். 

உங்கள் ராசியில் சுப ஸ்தானத்தில் இருந்தால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். கூடுதலாக குபேர பகவான் உங்கள் மீது ஆசிர்வாதம் செலுத்தி வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்த ராசுகளில் ஒன்றாக நீங்கள் விளங்கி வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு செல்வத்தில் எப்போதும் எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. கடின உழைப்பால் உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். 

பொருளாதார ரீதியாக உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. தொழில் ரீதியாகவும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணத்தில் உங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் குபேர பகவான் பார்த்துக்கொள்வார்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வருபவர் நீங்கள். வேலையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள் நினைத்து காரியத்தை முடிக்காமல் நகர மாட்டீர்கள். கடின உழைப்பு உங்களுக்கு உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்திக் கொடுக்கும். சூழ்நிலைகளை மாற்றுவதால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

குபேர பகவானின் அருள் ஆசி உங்களுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். எப்போதும் உங்களுக்கு பணத்தில் பற்றாக்குறை இருக்காது. அதனால் உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner