தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Horoscope For May 23

Today Rasi Palan: மே 23 - பொறுமையாக இருக்க வேண்டும் மக்களே..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2023 05:30 AM IST

மே 23ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

ட்ரெண்டிங் செய்திகள்

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதுவரை பிரச்சனையாக இருந்த குடும்பச் சூழல், மகிழ்ச்சியாக மாறும், கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், வெளியூரில் தங்க வேண்டிய அவசியம் ஏற்படும், மனதை அலைபாயாமல் வைத்திருங்கள். உங்களது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

ரிஷப ராசி

கடினமாக உழைத்தாலும் தொழிலில் லாபம் பெற வாய்ப்பில்லை. செலவு செய்வதில் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் வியாபாரமோ, தொழிலோ மந்தமான நிலையிலேயே செல்லும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை, எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

மிதுன ராசி

சிறப்புடன் வாழும் இலக்கணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய முதலீடு செய்யும் முயற்சிகளை தவிர்த்துவிடுங்கள், எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும், உடன்பிறந்தவர்களின் மூலம் உதவி கிடைக்கும். பெற்றோர்களுக்கு ஏற்ற பிள்ளையாக வாழ்வீர்கள்.

கடக ராசி

வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைச் சிறுதொழில் செய்பவர்கள் பெறுவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகும், அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவரிடத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

வார்த்தைகளில் கவனம் தேவை இல்லை என்றால் பிரச்னை ஏற்படும். கடனை திருப்பி கேட்கும் போது பிரச்சனை வர வாய்ப்புள்ளது. மனைவியின் பேச்சைக் கேளுங்கள், கையெழுத்துப் போடும் போது எச்சரிக்கையாக இருங்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் சிரமம் ஏற்படும். பணப் பிரச்சனை உண்டாகும்.

கன்னி ராசி

வெளியூர் பயணம் பலனைத் தராது, நிறம் சம்பந்தப்பட்ட தொழில் சற்று மந்தமாக இருக்கும். கேட்பவர்களுக்கு உதவி செய்வீர்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு வீட்டில் சாப்பிடுங்கள். திருமண வாய்ப்பு அதிகமாக உள்ளது. பிள்ளைகளால் செலவு உண்டாகும்.

துலாம் ராசி

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் குவியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு ஏற்றார்போல் குடும்பத்தினர் நடந்து கொள்வார்கள். நண்பர்களால் மன அமைதி ஏற்படும். சிக்கலான நேரங்களில் சரியான உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி

புதிய முயற்சிகளை வியாபாரத்தில் செயல்படுத்துவீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் பணவரவு உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

தனுசு ராசி

வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்படும். பொருட்களின் மீது அதிக கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படும்.

மகர ராசி

கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் உங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களைத் தேடி நல்ல செய்திகள் வரும்.

கும்ப ராசி

தேவையில்லாத பிரச்னைகள் உங்களைத் தேடி வரக் காத்திருக்கிறது. கடுமையான உழைப்பின் மூலம் பாராட்டு கிடைக்கும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அலைச்சல் அதிகமாகும்.

மீன ராசி

சில காரியங்கள் நிறைவேறுவதற்குத் தாமதமாகும். பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் செலவு அதிகரிக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்