HT Yatra: கிரகங்கள் சாபம் நீங்கிய தலம்.. நவகிரகங்களும் உள்ள சூரியனார் கோவில்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: கிரகங்கள் சாபம் நீங்கிய தலம்.. நவகிரகங்களும் உள்ள சூரியனார் கோவில்

HT Yatra: கிரகங்கள் சாபம் நீங்கிய தலம்.. நவகிரகங்களும் உள்ள சூரியனார் கோவில்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 06:30 AM IST

சூரிய பகவானின் தலமான சூரியனார் கோவில் வரலாறு குறித்து இங்கு காண்போம்.

சூரியனார் கோவில்
சூரியனார் கோவில்

கும்பகோணத்தைச் சுற்றி நவக்கிரகங்களுக்கு தனித்தனி சிறப்பு கோயில்கள் உள்ளன. நவகிரக பரிகார தளங்களாகவும் இந்த கோயில்கள் விளங்கி வருகின்றன. குறிப்பாக கூற வேண்டுமென்றால் தனித்தனியாக கோயில் அமைந்திருந்தாலும் இந்த சூரியனார் கோயிலில் மச்ச கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு தோஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

தல புராணம்

 

காலவமுனிவர் என்பவர் முக்காலத்தையும் அறியக்கூடிய திறன் கொண்டிருந்தார். அனைவரும் இவரிடம் வருங்காலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர் ஒருநாள் ஒரு துறவி காலவ முனிவரை காண்பதற்கு வந்தார். என்னுடைய வருங்காலம் குறித்து முனிவரே நீங்கள் கூறுங்கள் என துறவி கேட்டார்.

உடனே முனிவர் உங்களுடைய வருங்காலம் பற்றி ஒன்றும் கிடையாது என கூறினார். உடனே அந்த துறவி மற்றவர் வருங்காலத்தை கூறும் உங்களுக்கு உங்களுடைய வருங்காலம் பற்றி தெரியுமா என சிரித்தார். உடனே முனிவர் நீங்கள் யார் எனக் கேட்டார். உடனே அந்த துறவி நான் தான் கால தேவன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து மறைந்தார்.

உடனே முனிவர் தன்னுடைய வருங்காலம் பற்றி ஞான திருஷ்டியில் பார்த்தார். அதில் தொழுநோய் வந்து நோயற்று வாழ்வது போல் தோன்றியுள்ளது உடனே மனம் தந்த முனிவர் சோகத்தில் மூழ்கினார். உடனே சோகத்தில் இருந்த முனிவரை கண்டு மற்ற முனிவர்கள் நவ கிரகங்களை நோக்கி தவம் செய்து உங்களுடைய நோயிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

உடனே நவகிரகங்களை நோக்கி முனிவர் கடுமையான தவம் இருந்தார். கடுமையான தவத்திற்கு பிறகு நவகிரகங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு காட்சி கொடுத்துள்ளனர் உடனே முனிவர் தனது வரத்தை கேட்டுள்ளார் நவகிரகங்களும் வரத்தை கொடுத்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த பிரம்ம தேவர், என் கட்டளைப்படி நடக்காமல் நீங்கள் தனித்து எங்கு உங்களுக்கு எந்த அனுமதியும் கிடையாது என தெரிவித்துள்ளார். எந்த முனிவருக்கும் நோய் நீங்க வரம் கொடுத்தீர்களோ அதனை நீங்கள் பெற்று பூலோகத்தில் துன்பப்படுவீர்கள் என பிரம்ம தேவர் சாபம் விட்டார்.

உடனே தவறி உணர்ந்து நவகிரகங்களும் பிரம்ம தேவரிடம் சாப விமோசனம் கேட்டு வேண்டிக்கொண்டனர். மனமிரங்கிய பிரம்ம தேவர், பூலோகத்திற்கு சென்று அங்கு காவிரி தாயின் வடகரையில் தங்கி இருந்து தவம் செய்யுங்கள் 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

78 நாட்கள் தவம் இருந்த நவகிரகங்கள், 79வது நாள் காவிரி ஆற்றில் நீராடி தொழுநோய் குறைவதை கண்டனர் உடனே புராண நாதரை நோக்கி வழிபாடு செய்துள்ளனர். நவகிரகங்களுக்கு காட்சி கொடுத்த பிராண நாதர், நீங்கள் தவம் செய்த இடம் உங்களுடைய ஒரே தலமாக மாறும் உங்களை இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு தோஷம் நீங்க அனுக்கிரகம் கிடைக்கும் என சாபம் நீக்கி வரம் கொடுத்தார்.

கோயில் சிறப்புகள்

 

சூரியனார் கோயிலில் சூரிய பகவான் கர்ப்பகிரகத்திற்கு அருகே புதன், செவ்வாய், சனி, கேது, சுக்கிரன், ராகு என ஏழு கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

கோயிலுக்குச் சென்றவுடன் கோல்வினை தீர்த்த விநாயகரை முதலில் வழிபாடு செய்ய வேண்டும் அதற்கு பின்னர் சூரிய பகவான் குரு பகவான் சனி பகவான் புதன், சந்திரன் கேது சுக்கிரன் ராகு என அனைவரையும் வரிசையாக வழிபாடு செய்ய வேண்டும் கடைசியாக சண்டேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்.

கோயில் இருக்கும் இடம்

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த சூரியனார் கோயில் அமைந்துள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன தங்குமிடம் கும்பகோணம் மற்றும் அருகில் இருக்கக்கூடிய ஆடுதுறை பகுதியில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner