தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே திமிர் பிடித்த ராசிகள்.. ரொம்ப ஈகோ அதிகம்.. தலைக்கனத்தில் தலைவிரித்து ஆடுவார்கள்.. எல்லாம் போயிடும்

பிறப்பிலேயே திமிர் பிடித்த ராசிகள்.. ரொம்ப ஈகோ அதிகம்.. தலைக்கனத்தில் தலைவிரித்து ஆடுவார்கள்.. எல்லாம் போயிடும்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 12:30 PM IST

Ego Rasis: சில ராசிக்காரர்கள் இடம் எதிர்மறையான குணாதிசயங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களை விட தலைகளும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஈகோ சிக்கலால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திப்பார்கள்.

தலைதனம்
தலைதனம்

நவகிரகங்களுக்கு கீழ் செயல்படக்கூடிய 12 ராசிக்காரர்களும் தனிப்பட்ட குணாதிசயத்தை எப்போதும் பெற்றிருப்பார்கள். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும். பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் தனது அதிபதியாக விளங்கக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிக்காரர்கள் ஒரு சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார். அது நல்லவையாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம்.

அந்த வகையில் சில ராசிக்காரர்கள் இடம் எதிர்மறையான குணாதிசயங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களை விட தலைகளும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஈகோ சிக்கலால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தலைக்கனத்தால் அழிந்து போகக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

நீங்கள் அடிப்படையிலேயே கவர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்கள். உங்களுடைய தலைகனம் சில நேரங்களில் உங்கள் நல்ல குணங்களை மறைத்து விடக்கூடும். எப்போதும் பாராட்டு மற்றும் அங்கீகாரத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள் நீங்கள். அதேசமயம் ஆணவம் மற்றும் பிடிவாதத்திற்கு பெயர் பெற்றவர்கள். மற்றவர்களுக்கு உங்களிடமிருந்து கொடுக்க பல்வேறு விதமான சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் சில நேரங்களில் உங்களுடைய ஈகோ வெளியே வந்துவிடும். அதனால் நீங்கள் பல விஷயங்களை இழக்க நேரிடும்.

விருச்சிக ராசி

 

மிகவும் உணர்ச்சிமிக்க ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் அனைத்து காரியங்களிலும் தீவிரமாக செயல்படுவீர்கள். வலிமையான உணர்ச்சிகளோடு சில நேரங்களில் உங்கள் ஈகோவை வெளிப்படுத்தகின்ற காரணத்தினால் தலைகனம் சிக்கல் ஏற்படுத்துகிறது. உங்களுடைய ஆழமான தேவை மற்றும் தலை கன செயல்பாடு மற்றவர்களை உங்களிடமிருந்து பிரித்து விடுகிறது. பல்வேறு சிறப்பான குணாதிசயங்கள் உங்களிடம் இருந்தாலும் இந்த தலைகனம் உங்களை தாழ்த்தி விடுகிறது.

மேஷ ராசி

 

இயல்பிலேயே அதிக போட்டித் திறன் கொண்டவர்களாக நீங்கள் விளங்கி வருகிறீர்கள். எப்போதும் தலைவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அனைத்து இடத்திலும் நீங்கள் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அது மிகப்பெரிய தலை கடத்தை ஏற்படுத்தி மற்றவர்களிடம் இருந்து உங்களை பிரித்து விடும். இயல்பிலேயே அதிக சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுடைய ஈகோ நல்ல குணங்களை மறைத்து விடுகிறது.

ரிஷப ராசி

 

அதிக பிடிவாதம் மற்றும் பொருட்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். நீங்கள் வலுவான சுயநல உணர்வை அதிகமாக கொண்டவர்கள். நீங்கள் தவறு செய்தாலும் அதை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். விரும்பிய முடிவிலிருந்து எப்போதும் விலகுவதை நீங்கள் விரும்புவது கிடையாது. இதனால் உங்களுக்கு தலைகனம் அதிகம் ஏற்படுகிறது. ஈகோவால் ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் நபர்களை உங்களிடம் இருந்து பிரித்து விடுகிறது. ஈகோவின் பிடியில் சிக்கித் தவிக்கும் மிக முக்கிய ராசிகளில் நீங்களும் ஒருவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel