தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. நட்சத்திரத்தில் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகளில் நீங்களும் உண்டா?

குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. நட்சத்திரத்தில் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகளில் நீங்களும் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 01, 2024 05:09 PM IST

Guru Bhagavan: 10 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர மாற்றம் செய்துள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான்
குருபகவான்

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகமாக இருக்கக்கூடிய குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வாழ்வில் சுபிட்சங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய குருபகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் இன்று புகுந்தது மட்டுமல்லாமல் ஏப்ரல் பாதி ஏழாம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து விட்டார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர மாற்றம் செய்துள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உடைய அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் நலம் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்போகின்றது. வருமானத்தில் உங்களுக்கு நல்ல அதிகரிப்பு ஏற்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உயர் அலுவலர்களோடு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். கூட்டு வணிக முறையில் எதிர்பாராத நேரத்தில் லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிகள் அனைத்தும் உங்களை தேடி வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்து வேலைகள் விரைவில் முடிவடையும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அத்தனை நல்ல பலன்களையும் குரு பகவான் உங்களுக்கு கொடுப்பார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel