தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தோடு கபடி விளையாட போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாடத் தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகள் தயாரா?

பணத்தோடு கபடி விளையாட போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாடத் தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகள் தயாரா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 20, 2024 03:32 PM IST

Venus: சுக்கிரன் மிதுன ராசியில் பயணம் செய்கின்ற இந்த சூழ்நிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அப்படியே அள்ள அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பணத்தோடு கபடி விளையாட போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாடத் தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகள் தயாரா?
பணத்தோடு கபடி விளையாட போகும் ராசிகள்.. சுக்கிரன் விளையாடத் தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகள் தயாரா?

Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

இதுவரை ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் பகவான் கடந்த ஜூன் 12-ம் தேதி என்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

இந்நிலையில் சுக்கிரன் மிதுன ராசியில் பயணம் செய்கின்ற இந்த சூழ்நிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அப்படியே அள்ள அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சுக்கிரன் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நினைவில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் இனிமையாக இருக்கும். உங்கள் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் அதிகமான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் .தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மகத்தான யோகம் கிடைக்கப்போகிறது. செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் உங்களுக்கு நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரப்பில் இருந்த குறையும் இருக்காது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அனைவருடைய ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் உங்களுக்கு பணம் வரவு அதிகமாக உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9