Rasi Palan: பொத்துக்கிட்டு பணம் மழை கொட்டும்.. சுக்கிரன் கேது திறந்த அதிர்ஷ்ட கதவு..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasi Palan: பொத்துக்கிட்டு பணம் மழை கொட்டும்.. சுக்கிரன் கேது திறந்த அதிர்ஷ்ட கதவு..

Rasi Palan: பொத்துக்கிட்டு பணம் மழை கொட்டும்.. சுக்கிரன் கேது திறந்த அதிர்ஷ்ட கதவு..

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 10, 2024 12:05 PM IST

Rasi Palan: சுக்கிரன் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் பயணம் செய்வார். கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொட்டப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் குறித்து காணலாம்.

பொத்துக்கிட்டு பணம் மழை கொட்டும்.. சுக்கிரன் கேது திறந்த அதிர்ஷ்ட கதவு..
பொத்துக்கிட்டு பணம் மழை கொட்டும்.. சுக்கிரன் கேது திறந்த அதிர்ஷ்ட கதவு..

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய ஒரு சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். 

எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்வதால் அனைவரும் இவரை கண்ட அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார் கேது பகவான்.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிரன் கன்னி ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கன்னி ராசியில் பயணம் செய்து வரும் கேது பகவானுடன் இவர் இணைகின்றார். சுக்கிரன் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் பயணம் செய்வார். கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொட்டப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் குறித்து காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடக ராசியில் உங்களுக்கு செல்வ நிலைகள் கணிசமாக அதிகரிக்கும். 

கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குழந்தைகளிடமிருந்து உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் வாழ்க்கையில் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனித்துவமான ஆளுமை திறன் உங்களுக்கு கிடைக்கும். உயர்கல்விகள் மாணவர்கள் வெற்றி பெற்று உச்சத்தை அடைவார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இது சிறந்த காலமாக உங்களுக்கு அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வாழ்க்கை துணையை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்