தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Rahu And Ketu Are Going To Give Rajayoga Together

ராகு கேது அடிதடி பணமழை.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. அனைத்து யோகங்களும் கொட்டப் போகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 05:45 PM IST

Rahu and Ketu: ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர்.

ராகு பகவான் கேது பகவான்
ராகு பகவான் கேது பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு கேது இருவரும் தனக்கென சொந்த ராசிகள் இல்லாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு முழுவதும் ராகு கேது இருவரும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களால் ஏற்பட்டு வந்த விஷயங்கள் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

விருச்சிக ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு நிம்மதி மற்றும் சந்தோஷத்தை கொடுக்கப் போகின்றனர். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தோஷங்கள் நீக்கி சுகம் பெற வியாழக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் உங்களுக்கு உண்டாகும்.

தனுசு ராசி

 

குருபகவானின் ராசியான உங்களுக்கு ராகு கேது நன்மைகளை செய்யப் போகின்றனர். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பழைய கடன் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பு அதிகமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel