Money Luck: அபூர்வ ஜாக்பாட்.. கேதுவோடு இணைந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப்பட்ட 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?-here we will see about the zodiac signs that lord venus is going to give lord ketu yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: அபூர்வ ஜாக்பாட்.. கேதுவோடு இணைந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப்பட்ட 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Money Luck: அபூர்வ ஜாக்பாட்.. கேதுவோடு இணைந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப்பட்ட 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 07, 2024 10:02 AM IST

Zodiac signs: கேது சுக்கிரன் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் ஜாக்பாட் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அபூர்வ ஜாக்பாட்.. கேதுவோடு இணைந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப்பட்ட 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?
அபூர்வ ஜாக்பாட்.. கேதுவோடு இணைந்த சுக்கிரன்.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப்பட்ட 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சுக்கிரன் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைகின்றார். இதனால் கன்னி ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வரும் கேது பகவானோடு சுக்கிரன் இணைகின்றார். கேது சுக்கிரன் இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை இரண்டு கிரகங்களும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். கேது சுக்கிரன் சேர்ந்து பயணிக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் ஜாக்பாட் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனிப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். செல்வ நிலைகள் உங்களுக்கு அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. பணவரவில் இருந்து குறையும். இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் உங்களை வந்து சேரும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டம் உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். விரும்பிய இடத்திற்கு நீங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தொடர்புடையை செய்திகள்