Lord Shani Suriyan: சனி சூரியன் பணப்பார்வை.. 3 ராசிகள் ராஜா மாதிரி வாழப் போறாங்க.. நீங்க என்ன ராசி?
Lord Shani Suriyan: சூரியன் மற்றும் சனி இவர்கள் இருக்கின்ற நிலையிலையே பயணிக்கின்ற காரணத்தினால் இதனால் சம சப்தக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் விளைவு அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர்.

Lord Shani Suriyan: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் சிம்ம ராசியில் நுழைகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் அந்தந்த ராசிகளில் பயணிக்கும் பொழுது 180 டிகிரி இடைவெளியில் இருப்பார்கள்.
சூரியன் மற்றும் சனி இவர்கள் இருக்கின்ற நிலையிலையே பயணிக்கின்ற காரணத்தினால் இதனால் சம சப்தக யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் விளைவு அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
சூரியன் மற்றும் சனி சமசப்தக யோகத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. நிதி விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். சொத்து மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் விளைவுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பல வருடங்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உங்களுக்கு தனிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
சிம்ம ராசி
சூரியன் மற்றும் சனி யோகத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் சில மோசமான சூழ்நிலைகள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து சிக்கல்களும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். கடுமையான வேலைகளிலிருந்து உங்களுக்கு ஓய்வு கிடைக்க கூடும்.
புதிய திட்டங்கள் தொடங்குவதற்கு இது சிறந்த நேரம் ஆக அமையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். உங்களுடைய வாழ்க்கை முழுமையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். பெரிய நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். மிகுந்த மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கக்கூடும். அனைத்து சிக்கல்களிலும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்