Guru and Mars: தலைகீழாக பணத்தில் இறக்கும் குரு செவ்வாய்.. மகிழ்ச்சியில் உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?-here we will see about the zodiac signs that guru and mars will bring luck - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru And Mars: தலைகீழாக பணத்தில் இறக்கும் குரு செவ்வாய்.. மகிழ்ச்சியில் உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru and Mars: தலைகீழாக பணத்தில் இறக்கும் குரு செவ்வாய்.. மகிழ்ச்சியில் உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 03:39 PM IST

Guru and Mars: குரு பகவானுடன் செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தலைகீழாக பணத்தில் இறக்கும் குரு செவ்வாய்.. மகிழ்ச்சியில் உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
தலைகீழாக பணத்தில் இறக்கும் குரு செவ்வாய்.. மகிழ்ச்சியில் உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

அதிர்ஷ்டத்தின் நாயகனாக குரு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தன்னம்பிக்கை செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு இந்த ராசியில் தான் பயணம் செய்வார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜூலை மாதத்தில் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் ஏற்கனவே ரிஷப ராசிகள் பயணம் செய்து வரும் குரு பகவானுடன் செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் பெரிய அளவில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய முதல் நிகழ்வுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் சிறப்பான நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பங்குச் சந்தையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடம் மாற்றும் சிலருக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணை அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வர போகின்றது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner