தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Nakshatra: குரு சதுரங்க வேட்டை தொடக்கம்.. பணத்தில் உள் நீச்சல் போடும் ராசிகள்.. காற்றில் பறப்பது உறுதி

Guru Nakshatra: குரு சதுரங்க வேட்டை தொடக்கம்.. பணத்தில் உள் நீச்சல் போடும் ராசிகள்.. காற்றில் பறப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 09:55 AM IST

Guru Nakshatra: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு சதுரங்க வேட்டை தொடக்கம்.. பணத்தில் உள் நீச்சல் போடும் ராசிகள்.. காற்றில் பறப்பது உறுதி
குரு சதுரங்க வேட்டை தொடக்கம்.. பணத்தில் உள் நீச்சல் போடும் ராசிகள்.. காற்றில் பறப்பது உறுதி

Guru Nakshatra: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

குருபகவான் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் உங்களை தேடி வரும். நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

செல்வத்தின் வருகை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுன ராசி

குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

மன உளைச்சலால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைப்பதால் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. அபரிமிதமான செல்வம் உங்களை தேடி வரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9