Lord Sani: சனி 2025-ல் மீனத்தில் நுழைகிறார்.. கோரப்பார்வையில் இருந்து தப்பித்த 3 ராசிகள்.. என்ன ராசி என்று தெரியுமா?-here we will see about the zodiac signs that get lord sani money yoga in 2025 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி 2025-ல் மீனத்தில் நுழைகிறார்.. கோரப்பார்வையில் இருந்து தப்பித்த 3 ராசிகள்.. என்ன ராசி என்று தெரியுமா?

Lord Sani: சனி 2025-ல் மீனத்தில் நுழைகிறார்.. கோரப்பார்வையில் இருந்து தப்பித்த 3 ராசிகள்.. என்ன ராசி என்று தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2024 11:38 PM IST

Lord Sani: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Sani: சனி 2025-ல் மீனத்தில் நுழைகிறார்.. கோரப்பார்வையில் இருந்து தப்பித்த 3 ராசிகள்.. என்ன ராசி என்று தெரியுமா?
Lord Sani: சனி 2025-ல் மீனத்தில் நுழைகிறார்.. கோரப்பார்வையில் இருந்து தப்பித்த 3 ராசிகள்.. என்ன ராசி என்று தெரியுமா?

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிகளின் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

சனி பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவேண்டிய இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் நெருக்கடியால் ஏற்பட்டு வந்தது சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அடையாளம் உருவாகும். தேவைக்கேற்ப அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு தேடிவரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது முழுமையான பலன்கள் உங்களை தேடிவரும்.

கடக ராசி

சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு சுலபமான விடுதலையை பெற்றுத் தரப் போகின்றது. இதுவரை கோபத்தில் சிக்கிக் கொண்டிருந்த உங்களுக்கு சுகப்பலன்கள் கிடைக்க போகின்றது. வாழ்க்கையில் வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நிதி நிலைமைகள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

சனி பகவானின் கோப பார்வையிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஏனென்றால் வரும் 2025 ஆம் ஆண்டு சனிபகவான் மீன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு உங்கள் பாதிப்புகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்