தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: குரு பொன்னாடை போர்த்த வருகிறார்.. கிரீடம் அணியும் ராசிகள்.. பணத்தின் மிதப்பது உறுதி.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Lord Guru: குரு பொன்னாடை போர்த்த வருகிறார்.. கிரீடம் அணியும் ராசிகள்.. பணத்தின் மிதப்பது உறுதி.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 12:47 PM IST

Lord Guru: மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இது பல்வேறு ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பொன்னாடை போர்த்த வருகிறார்.. கிரீடம் அணியும் ராசிகள்.. பணத்தின் மிதப்பது உறுதி.. அதிர்ஷ்டம் யாருக்கு?
குரு பொன்னாடை போர்த்த வருகிறார்.. கிரீடம் அணியும் ராசிகள்.. பணத்தின் மிதப்பது உறுதி.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Lord Guru: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். நவக்கிரகங்களில் இவர் நம்பிக்கை ஆடம்பரம், சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மங்கல நாயகனாக திகழ்ந்து வருகின்றார்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இது பல்வேறு ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்திற்கு நுழைந்தார். ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் ரோகிணி நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான யோகங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அவருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் நீங்கள் நினைக்க முடியாத லாபம் உங்களுக்கு கிடைக்கும். 

வெளிநாட்டில் வேலை செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அனைத்து ஆசைகளும் உங்களுக்கு நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குருபகவானின் ஐந்தாம் பார்வையால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பார்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் மூலம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சக ஊழியர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். கூட்டத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9