தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பரணியில் பம்பரம் விடப் போகும் சூரியன்.. மே 11 முதல் பணமழை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்குது

பரணியில் பம்பரம் விடப் போகும் சூரியன்.. மே 11 முதல் பணமழை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்குது

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 10:54 AM IST

Ashwini Nakshatra: நவகிரகங்களின் தலைவனாக இருந்து மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினாலும் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இப்படி மாறும் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

நட்சத்திர பெயர்ச்சி
நட்சத்திர பெயர்ச்சி

நவகிரகங்களின் தலைவனாக இருந்து மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினாலும் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இப்படி மாறும் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏப்ரல் 13ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சனிபகவான் நுழைந்தார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். அதற்கு பிறகு மே பதினொன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைகிறார். சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால கவலைகள் உங்களை விட்டு விலகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண சேமிப்பு உங்களிடம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். புத்திசாலித்தனமான முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel