தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mrigashirsha Luck: மிருகசீரிஷத்திற்கு மாறும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அலையப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Mrigashirsha Luck: மிருகசீரிஷத்திற்கு மாறும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அலையப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 05, 2024 12:45 PM IST

Mrigashirsha Luck: சுக்கிரன் வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் ஜூன் 18ஆம் தேதி வரை தொடர்கிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.

மிருகசீரிஷத்திற்கு மாறும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அலையப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
மிருகசீரிஷத்திற்கு மாறும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தில் அலையப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது தனது சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார்.

சுக்கிரன் வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் ஜூன் 18ஆம் தேதி வரை தொடர்கிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

சனிபகவானை அதிபதியாகக் கொண்ட உங்கள் ராசியில் சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கன்னி ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத் தரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களது கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் வழக்கத்தை விட சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு நல்ல லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel