சனி.. சாம்ராஜ்யத்தில் நுழைந்த ராசிகள்.. இனி பணத்தோடு பேசுவது யார்?.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி.. சாம்ராஜ்யத்தில் நுழைந்த ராசிகள்.. இனி பணத்தோடு பேசுவது யார்?.. உங்க ராசி என்ன?

சனி.. சாம்ராஜ்யத்தில் நுழைந்த ராசிகள்.. இனி பணத்தோடு பேசுவது யார்?.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 07, 2024 11:51 AM IST

Lord Shani: வருகின்ற மார்ச் 2025 ஆம் ஆண்டு 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனி பகவான் விளைகின்றார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி.. சாம்ராஜ்யத்தில் நுழைந்த ராசிகள்.. இனி பணத்தோடு பேசுவது யார்?.. உங்க ராசி என்ன?
சனி.. சாம்ராஜ்யத்தில் நுழைந்த ராசிகள்.. இனி பணத்தோடு பேசுவது யார்?.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற மார்ச் 2025 ஆம் ஆண்டு 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனி பகவான் விளைகின்றார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும் திடீர் நிதி ஆதாயம் கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றம் உண்டாகும். முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாக்கும். வருமானத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பெரிய அளவில் பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாம் வகுப்பு சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலகம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பெரிய சாதனங்களை படைக்கக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.