இன்று சூறையாட்டத்தை தொடங்கினார்.. சூரியனால் பிரகாசமாக போகும் ராசிகள்.. பணம் தலைமேல் கொட்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இன்று சூறையாட்டத்தை தொடங்கினார்.. சூரியனால் பிரகாசமாக போகும் ராசிகள்.. பணம் தலைமேல் கொட்டும்!

இன்று சூறையாட்டத்தை தொடங்கினார்.. சூரியனால் பிரகாசமாக போகும் ராசிகள்.. பணம் தலைமேல் கொட்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 17, 2024 05:47 PM IST

Lord Surya: சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் ஆனது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் லாபத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இன்று சூறையாட்டத்தை தொடங்கினார்.. சூரியனால் பிரகாசமாக போகும் ராசிகள்.. பணம் தலைமேல் கொட்டும்!
இன்று சூறையாட்டத்தை தொடங்கினார்.. சூரியனால் பிரகாசமாக போகும் ராசிகள்.. பணம் தலைமேல் கொட்டும்!

இது போன்ற போட்டோக்கள்

இந்நிலையில் சூரிய பகவான் இதுவரை கன்னி ராசியில் பயணம் செய்து வந்தார். அக்டோபர் 17ஆம் தேதி இன்று சூரிய பகவான் துலாம் ராசிக்கு செல்கிறார். சூரிய பகவானின் துலாம் ராசி பயணம் ஆனது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் லாபத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். விடாமுயற்சியால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்ப ராசி

சூரியன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உங்களுடைய சகோதரனால் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

சூரியன் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.