தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs Blessed By Saturn

Sani Fly: சனி உதயத்தில் உச்சம் செல்ல போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 02:22 PM IST

Shani Bhagavan: சனிபகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே அரசியல் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகியுள்ளார். வரும் மார்ச் மாதம் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பல நாள் சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் இந்த சிக்கல்களும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். நீண்ட நாட்கள் தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். பண வரவழைத்த குறையும் இருக்காது. வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel