Transit of Mars: செவ்வாய் தரும் ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்
செவ்வாய் பகவானால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகிறார். மங்கள கிரகங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தைரியம், வீரம், திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். செவ்வாய் பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகிறார். ஒரு அக்டோபர் மூன்றாம் தேதி வரை இதே ராசியில் இருப்பார்.
அதன் பின்னர் செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் ராஜயோகத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சுப பலன்களை அள்ளி கொடுக்க போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். எதிரிகளின் சிக்கல்கள் குறையும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி கிடைக்கும். தேவையில்லாத இடங்களில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்க போகின்றார். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் பாக்கியம் கிட்டும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவான் ராசி மாற்றத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்து அதிக வாய்ப்புள்ளது. புதிய வழிகளில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்