தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Rasis That Get Yoga Due To The Transit Of Guru Bhagavan

Guru Luck: குரு நட்சத்திர பெயர்ச்சி..3 ராசிகளுக்கு பண மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 04:56 PM IST

குரு பகவானின் இடமாற்றத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற அனைத்து செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை குரு பகவான் மாற்றினாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடம் மாற்றத்தை செய்வார். அதன் தாக்கமும் 12 ராசிகளுக்கும் இருக்கும். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான்.

பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார். குரு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் வரை அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல் லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel