Guru Peyarchi 2024: குரு பிரித்துப் போட்ட போகும் யோகம்.. குபேர ராசிக்காரர்கள் இவர்கள்தான்-here we will see about the rasis in which guru bhagwan gains yoga by transposition - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: குரு பிரித்துப் போட்ட போகும் யோகம்.. குபேர ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Guru Peyarchi 2024: குரு பிரித்துப் போட்ட போகும் யோகம்.. குபேர ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 10:47 AM IST

Guru Peyarchi 2024: குரு பகவான் இடமாற்றத்தால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். அப்போது பல்வேறு விதமான மாற்றங்கள் பன்னிரண்டு ராசிகளுக்கும் உண்டாகும். அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இவருடைய இடமாற்றும் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. அதே சமயம் குரு பகவானின் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் குருபகவான் மே 6ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார்.

ராசி மாற்றம் மட்டுமல்லாது கிரகங்களின் மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட போகின்றார். அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சேமிப்பு காண வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும். இல்லாமல் பார்த்துக் கொள்வார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

சிம்ம ராசி

 

குருபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருப்பார். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வன்னியர்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner