Lucky Rasis: பணக்கார யோகம் கொண்ட 5 ராசிகள்.. நீங்க என்ன ராசி?
கோடீஸ்வர யோகம் உள்ள ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் தொடங்கும் போது நமது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு விடாதா என பலரும் எதிர்பார்ப்பது உண்டு. குறிப்பாக ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் முக்கிய கிரக கிரகங்களாகக் கருதப்படும் ராகு கேது குரு மற்றும் சனி பெயர்ச்சிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
அதேபோல் கிரக பெயர்ச்சிகளை கண்டு பயத்திலும் இருப்பார்கள். இப்படி கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு எந்தெந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகம் பெறப் போகிறார்கள் என்பது குறித்து இங்கே காணலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு தொடக்கத்தில் இருந்து ராகு பகவான் தனது பார்வையைச் செலுத்தி வருகிறார். அந்த ஏப்ரல் மாதத்தில் குரு பகவானும் உங்கள் ராசியில் ராகுவோடு இணைந்து கொண்டார். இதன் மூலம் நிதி நிலை மட்டுமல்லாது பல்வேறு வகையில் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும் என கூறப்படுகிறது.
ஆசையைத் தூண்டக்கூடிய ராகு பகவானோடு குரு பகவானும் சேர்ந்து இருப்பதால் உங்கள் பொருளாதாரத்தில் எந்த சிக்கல்களும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
மிதுன ராசி
குரு பகவானின் சிறப்பான பலன்களைப் பெற்று வந்த நீங்கள், ஏப்ரல் மாதத்தில் இருந்து குருவின் சிறப்பான பலன்களைப் பெற்று வருவதாக ஆன்மீகம் கூறுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் வரும் காலங்களில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள் எனக் கூறப்படுகிறது.
கடக ராசி
குரு பகவானும், ராகு பகவானும் சேர்ந்து உங்களுக்கு இதுவரை சிறப்பான பலன்களைக் கொடுத்து வந்திருப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து குரு மற்றும் ராகு பகவான்களினால் தொழில் மற்றும் வியாபார ரீதியாக வெற்றி கிடைத்தற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் இருந்தாலும், சம்பள உயர்வு மற்றும் பதிவு உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி
குருபகவான் ஐந்தாம் பார்வை உங்களுக்குக் கிடைக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து வழியிலிருந்தும் பண வரவு இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தொழில் ரீதியான முன்னேற்றங்கள் உங்களுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
தனுசு ராசி
நீங்கள் சனிபகவானின் பிடியிலிருந்து விடுபடப் போகிறீர்கள் என்பதுதான் மிகவும் மகிழ்ச்சியான விஷயம். குரு பகவான் மற்றும் ராகு பகவான் சேர்ந்து உங்களுக்குச் சிறப்பான பலன்களைக் கொடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
(பொறுப்புத்துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.)
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்