தரித்திரமாக பிடிக்கும் செவ்வாய்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. உங்க ராசியை இனி விட மாட்டார்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தரித்திரமாக பிடிக்கும் செவ்வாய்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. உங்க ராசியை இனி விட மாட்டார்

தரித்திரமாக பிடிக்கும் செவ்வாய்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. உங்க ராசியை இனி விட மாட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 11:26 AM IST

lord Mars: செவ்வாய் பகவானின் மீன ராசி சஞ்சாரமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

செவ்வாய்
செவ்வாய்

செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் தோஷ தான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி சஞ்சாரமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் உண்டாகும். பேசும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு வாக்குவாதம் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். நிதி ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை தராது. வெளியூர் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை அதிக கவனம் செலுத்தி காத்துக் கொள்ள வேண்டும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகும். வசதி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். சிறு வேலையை முடிப்பதற்கும் அதிக உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner