HT Yatra: சுந்தரரிடம் திருவிளையாடல்.. சுயம்பு மூர்த்தியாக உதித்த கொளஞ்சியப்பர்..சிவனால் வந்த முருகன்..பார்வதியின் ஆசை
Kolanjiyappar Temple: தமிழ்நாட்டில் பல்வேறு விதமான சிறப்பு கோயில்களில் வீற்றிருந்து பக்தர்களை அருள் பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றுதான் கொளஞ்சியப்பர் திருக்கோயில்.
தமிழ் மக்களின் குலதெய்வமாக முருகப்பெருமாள் விளங்கி வருகின்றார். தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் இவர். உலகம் முழுவதும் தனித்துவமான பக்தர்கள் கொண்டு தனித்தனி கோயில்களில் சிறப்புமிக்க கடவுளாக முருக பெருமான் அருள் பாலித்து வருகின்றார்.
அறுபடை வீடுகள் கொண்டு தமிழ்நாட்டில் முருக பெருமான் தமிழ் மக்களை ஆட்சி செய்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு விதமான சிறப்பு கோயில்களில் வீற்றிருந்து பக்தர்களை அருள் பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றுதான். கொளஞ்சியப்பர் திருக்கோயில்.
இந்த திருக்கோயிலில் முருக பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மணவாளநல்லூர் என்ற ஊரில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கொளஞ்சியப்பரின் வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி விநாயகப் பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
தனித்துவ வேண்டுதல்கள்
இந்த திருக்கோயிலில் தனது பிரச்சனைகளை முருகப்பெருமான் முடிக்க வேண்டும் என்பதற்காக பிராது கட்டுதல் என்று நேற்று கடன் நடத்தப்படுகிறது. கடுமையாக எந்த சிக்கல்களில் அவதிப்பட்டு வந்தாலும் அதனை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக இந்த நேர்த்திக்கடன் நடத்தப்படுகிறது.
அதேபோல கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு இந்த நாளில் நான் வைத்த கோரிக்கை நிறைவேறிவிட்டது என கூறிவிட்டு, ராஜினாமா கட்டணம் செலுத்தி அந்த நேர்த்திக் கடனை வாபஸ் வாங்கிக் கொள்கின்றனர் பக்தர்கள்.
தங்களால் கட்டுப்படுத்த முடியாத சிக்கலை முருகப்பெருமான் நிவர்த்தி செய்வார் என்று நம்பி இந்த நேர்த்திக்கடன் இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.
தலத்தின் பெருமை
முருக பெருமான் இந்த கோயிலில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கண்ணுக்குப் புலப்படாத அருவுருவ திருமனையாக காட்சி கொடுக்கின்றார். மேலும் முருக பெருமான் பலி பீட ஸ்வரூபமாக காட்சி கொடுக்கின்றார். மூன்றடி உயரத்தில் சுயம்பு பலிபீடமே இங்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தலத்தின் வரலாறு
தேவாரம் பாடிய சுந்தரர் விருதாச்சலத்திற்கு ஒருமுறை வந்துள்ளார். விருதாச்சலத்தில் பழமை மிகுந்த கோயிலான பல யுகம் கண்ட சிவபெருமான் சமேத விருத்தாம்பிகை கோயில் இருந்து வருகிறது. இளமையாக வந்த சுந்தரர் பல யுகம் கண்ட கோயிலை என்னால் பாட முடியாது அதற்கு எனக்கு இன்னும் தகுதி ஏற்படவில்லை எனக் கூறி இறைவனை வணங்கி விட்டு சென்றுவிட்டார்.
சிவபெருமானுக்கு எப்போதும் சுந்தரரின் பாடல்கள் மீது அதிக விருப்பம். உடனே சிவபெருமானும் பார்வதி தேவியும் முருகப்பெருமானை அழைத்துள்ளனர். உடனே முருகன் வேடுவ வடிவம் கொண்டு சுந்தரரிடம் இருந்த பொன் மற்றும் பொருட்களை அபகரித்துச் சென்றார்.
இறைவனுக்காக பணி செய்ய வைத்துள்ளேன் அதை என்னிடம் கொடுத்துவிடு என சுந்தரர் கேட்டுள்ளார். விருத்தாச்சலம் திருமுதுகுன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. உடனே வேடுவ வடிவத்தில் இருந்த முருகப்பெருமான் திருமுதுகுன்றத்தில் பெற்றுக் கொள் எனக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.
உடனே வந்தது இறைவன் தான் என அறிந்த சுந்தரர். உடனே சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று இறைவன் புகழ்ந்து பாடி இழந்த பொருட்களை பெற்றுள்ளார். வேண்டுப வடிவத்தில் சுந்தரரிடம் விளையாடிய முருக பெருமான் திருமுதுகுன்றத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்து சுந்தரருக்கு காட்சி கொடுத்துள்ளார். இந்த இடத்தில் கொளஞ்சி எனப்படும் மரங்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இங்கே சுயம்பு மூர்த்தி ஆக வந்த மிருகப் பெருமான் கொளஞ்சியப்பர் என அழைக்கப்படுகிறார்
அமைவிடம்
கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய விருதாச்சலத்தில் மணவாளநல்லூர் என்ற ஊரில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள், வாகனம் வசதிகள் மற்றும் தங்கும் இடம் வசதிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9