HT Yatra: அகோர மூர்த்தியாக வந்த சிவபெருமான்.. மோட்சம் கொடுக்கும் புதன் பகவான்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்கள் காவிரி கரையோரம் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அந்த வகையில் புதன் பகவான் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலின் மூலவராக சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரர் என்ற பெயரில் காட்சி கொடுத்து வருகிறார் தாயார் பிரமவித்யாம்பிகையாக அருள் பாலித்து வருகிறார்.
நவகிரகங்கள் ஒவ்வொரு இடங்களில் அமர்ந்து அருள் பாலித்த வருகின்றனர். அந்த வகையில் இந்த திருக்கோயில் புதன் பகவானின் திருத்தலமாக விளங்கிய வருகிறது. இந்த கோயில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 11-வது தலமாகும். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார் இவர் திருவெண்காடார், திருவெண்காடையார், திருவெண்காடு பெருமாள் என பல பெயர்களில் அருள் பாலித்து வருகிறார்.
புதன் பகவானை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும் இந்த திருக்கோயிலில் வந்து புதன் பகவானே வழிபட்டால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ரபாதம் இருக்கின்ற காரணத்தினால் இங்கு வந்து வழிபட்டால் 21 தலைமுறைக்கு இருக்கக்கூடிய பிதுர் சாபங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.
காசிக்கு நிகராக இருக்கக்கூடிய ஆறு தளங்களில் இந்த திருத்தலமும் ஒன்றாகும். சிதம்பரம் கோயிலில் இருப்பது போலவே இந்த கோயிலிலும் நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. கல்வெட்டுகளில் இங்கு இருக்கக்கூடிய நடராஜரை ஆடவல்லான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தல புராணம்
இந்த திருத்தலத்தில் இருக்கக்கூடிய சக்தி வடிவம் கொண்ட தாயார் மாதங்க முனிவருக்கு மகளாகப் பிறந்து மாதங்கியாக உருவெடுத்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வித்யா காரகனாக விளங்கக்கூடிய புதன் பகவான் வித்யாம்பிகையின் அரவணைப்பில் திகழ்ந்து வருகிறார்.
மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் வரம் பெற்று தேவர்களை துன்புறுத்தி வந்துள்ளார். சிவபெருமானிடம் சென்ற தேவர்களை, வேறு உருவம் மாறி திருவெண்காட்டில் வாழ்ந்து வருமாறு தேவர்களிடம் சிவபெருமான் கூறியுள்ளார். திருவெண்காட்டிற்கு வந்த அசுரன் தேவர்களோடு போர் செய்துள்ளான் அப்போது சிவபெருமானை நோக்கி தவம் செய்து சூலாயுதத்தை வரமாக பெற்றுள்ளார்.
அந்த சூலாயுதத்தை கொண்டு ரிஷப தேவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார் அந்த அசுரன்.
இதனை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டு தனது ஐந்து முகங்களில் இருந்து ஈசானிய முகத்தில் மூலம் அகோர மூர்த்தியாக தோன்றினார். சிவபெருமானின் அந்த அகோர முகத்தை கண்ட அசுரன் உடனே அடிபணிந்து சரணாகதி அடைந்தான்.
சரணாகதி அடைந்த அசுரனும் காயம் பட்ட ரெடமை மூர்த்தியும் இந்த கோயிலில் நிறுத்த மண்டபத்தில் இருக்கின்றனர். தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் இது மிகவும் முக்கிய தலமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அகோர சிவபெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அகோர பூஜை நடத்தப்படுகிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இந்த கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இது மிகவும் பழமையான கோயிலாக விளங்கி வருகிறது.
புதன் பகவானின் பரிகாரத்தலமாக இந்த திருத்தலம் விளங்கி வருகிறது. புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தல் மலர் சூட்டி பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நரம்பு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் குணமடைந்து நல்வாழ்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தளத்தில் வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் எனவும் தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, கல்வி அறிவு உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது இங்கு பேருந்து வசதிகளும், தங்கும் வசதிகளும் உள்ளன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9