2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?

2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 03, 2024 12:39 PM IST

New Year 2025: 2025 புத்தாண்டில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் எந்தெந்த விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும். அதனை எப்படி கையாள வேண்டும் என பல்வேறு விதமான பலன்கள் குறித்து 12 ராசிகளுக்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இங்கு காண்போம்.

2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?
2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கும் பலன்கள்.. பணத்தில் குளிக்கப் போவது யார்?

இந்த புத்தாண்டில் பல பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளும் சிறப்பான சூழ்நிலைகளை பெறப்போகின்றனர். அவ்வப்போது பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட்டாலும் பல யோகங்கள் கிடைக்கக்கூடும். ஒரு சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலை இருந்தாலும் அதன் நிலை மாறுபடுகின்ற காரணத்தினால் பலன்கள் சிறப்பாக இருக்கும்.

அந்த வகையில் இந்த 2025 புத்தாண்டில் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் எந்தெந்த விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும். அதனை எப்படி கையாள வேண்டும் என பல்வேறு விதமான பலன்கள் குறித்து 12 ராசிகளுக்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு வேலை மற்றும் தொழில் தொடர்பான பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில காரியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்படக்கூடும். இந்த ஆண்டு முழுவதும் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். சொந்த தொழிலில் லாபம் கிடைக்கக்கூடும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்திற்காக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.

மிதுன ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு வேலை மற்றும் சொந்த தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றத்தை பெற்று தரும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சில சிக்கல்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வணிகம் உங்களுக்கும் அந்தமாக இருக்கும். முதலீடு செய்வதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணத்தை சரியாக கையாள வேண்டும் இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு வேலை தொடர்பான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய சூழலுக்கு சென்றால் அதற்கு ஏற்றார் போல் பழகிக் கொள்வது நல்லது. செய்யும் தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

2025 ஆம் ஆண்டு கேது பகவானிடம் இருந்து நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள். இதனால் விலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் வளர்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுடைய ஆற்றல் மற்றும் மன தைரியம் அதிகரிக்க கூடும். வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரால் மனக்கவலை ஏற்படக்கூடும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் அமைதியாக செல்வது நல்லது.

விருச்சிக ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கக்கூடும். பல்வேறு விதமான நன்மைகள் நடக்கும் புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்ற தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

தனுசு ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு தனிப்பட்ட திறமை வெளிப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப உறவுகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் மன நிம்மதி உங்களுக்கு அதிகரிக்கப்படும்.

மகர ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சமநிலையாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு விதமான சவால்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்ப ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் தனி கவனம் செலுத்துவது நல்லது.

மீன ராசி

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கருத்து மோதல் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் மனக்கசப்பு குறையும். சொந்த வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner