2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்! 8ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய நியூமராலஜி எண்ணாக 8ஆம் எண் உள்ளது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்.

இன்னும் ஒருமாத காலத்தில் 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு விரைவில் தொடங்க உள்ளது. ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய நியூமராலஜி எண்ணாக 8ஆம் எண் உள்ளது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். பொறுமைசாலிகளான நீங்கள் எதிலும் பொறுமையை கடைப்பீர்கள். சில நேரங்களில் உங்கள் சோம்பேறித்தனம் பிரச்னைகளை ஏற்படுத்தி தரும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன்பும் அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து செயல்படுவீர்கள். எல்லோருடனும் நட்பாகவும் நேர்மையாகவும் பழகுவீர்கள்.
வரவிருக்கும் 2025ஆம் ஆண்டில் பணம் சார்ந்த விவகாரங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலை தொடங்கும் போதும் நிதானம் தேவை. 8, 9, 1, 7 மற்றும் 5 ஆகிய எண்கள் வரவிருக்கும் ஆண்டில் உங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 8ஆம் எண் ஆனது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நேர்மறை பலன்களை கொடுக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் இறுதியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள்.
