தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சொட்டச் சொட்ட பணமழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள்தான்.. செவ்வாய் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டம் உங்களுக்கே..!

சொட்டச் சொட்ட பணமழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள்தான்.. செவ்வாய் வந்துவிட்டார்.. அதிர்ஷ்டம் உங்களுக்கே..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 18, 2024 04:33 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய்
செவ்வாய்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்படும். தற்போது செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளார். அதாவது மார்ச் 15ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசிகள் நுழைந்தார்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் அவரோடு சேர்ந்து பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பொறுமையை கடைப்பிடித்தால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சாதகமான பலன்கள் அமையப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் செல்வம் பெருகும் சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel