தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தில் விளையாட்டு காட்டப் போகும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்க போகும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு தானா?

பணத்தில் விளையாட்டு காட்டப் போகும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்க போகும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு தானா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 04:36 PM IST

Lord Venus: சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணத்தில் விளையாட்டு காட்டப் போகும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்க போகும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு தானா?
பணத்தில் விளையாட்டு காட்டப் போகும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்க போகும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை உங்களுக்கு தானா?

சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி என்று மேஷ ராசியில் நுழைந்தார். கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். 

சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலி மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிக நேரம் குடும்பத்தோடு செலவிடுவீர்கள்.

மிதுன ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. கை வைத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

சுக்கிரனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இலக்குகளை நோக்கி பயணிப்பவர்களுக்கு சிக்கல்கள் இருக்காது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு முழு பலன்களை முழுமையாக கொடுக்க போகின்றது. உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel