தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீன ராசியில் கபடி விளையாடும் செவ்வாய்.. விரட்டி வெளுத்து வாங்க போவது உறுதி.. தலைகீழாக சிக்கிக்கொண்ட ராசிகள்

மீன ராசியில் கபடி விளையாடும் செவ்வாய்.. விரட்டி வெளுத்து வாங்க போவது உறுதி.. தலைகீழாக சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 27, 2024 04:39 PM IST

Lord Mars: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். மீன ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்க கூடும்.

செவ்வாய்
செவ்வாய்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவானின் கும்ப ராசியில் இதுவரை பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார்.

ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். மீன ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்ததால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைக்க கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

புதிய தொழில் தொடங்க நினைத்தால் அதனை தற்போது தள்ளி வைப்பது நல்லது. நிதி ரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பெரிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனரீதியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்க கூடும். சில வேலைகளை முடிக்க சற்று தாமதமாகும். சின்ன சின்ன வேலைகள் கூட முடிவடைவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும். 

வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் வியாபாரம் மற்றும் தொழிலில் நீங்கள் நஷ்டத்தை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel