தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி நேர்கோட்டில் விழுந்தார்.. பண குளத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்

Lord Sani: சனி நேர்கோட்டில் விழுந்தார்.. பண குளத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 10:30 AM IST

Lord Saturn: சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சனி நேர்கோட்டில் விழுந்தார்.. பண குளத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்
சனி நேர்கோட்டில் விழுந்தார்.. பண குளத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை தொடங்குகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். எதிர்காலத்தை நோக்கிய பயணம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். 

மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்காக செயல்படுவார்கள்.

ரிஷப ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து திருப்தி அதிகரிக்கும். 

உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடுகளில் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை வேலை செய்யும் இடத்தில் பெற்று தரும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்த லாபம் அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel