தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார்.. இனி இந்த ராசிகளை தடுக்க முடியாது.. பணத்தின் மிதக்க போகும் ராசிகள்

குரு உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார்.. இனி இந்த ராசிகளை தடுக்க முடியாது.. பணத்தின் மிதக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 04, 2024 02:09 PM IST

Guru Bhagavan: தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குருபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் என்ற ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். தேவர்கள் குருவாக விளங்கிவரும் குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குருபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் குரு பகவான் முதல் வீட்டில் பயணம் செய்த வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பயனுள்ள ஆண்டாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்கள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த அளவில் நீங்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மற்றபடி நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இது உங்களுக்கு அதிர்ஷ்ட காலமாக அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel