தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Get Yoga From Lord Surya

Sun Transit: சூரியனின் ஆசிர்வாதத்தை பெற்ற ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 06, 2024 04:01 PM IST

சூரிய பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தற்போது சூரிய பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். கும்ப ராசியில் நுழைந்த சூரிய பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.

ஏனென்றால் ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இருவரும் தற்போது இணைந்துள்ளனர். சூரிய பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தை விரிவாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

சனி பகவானின் ராசியில் சூரியன் புகுந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.

கும்ப ராசி 

 

சூரியன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுத் திறமையால் காரியங்கள் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel