தரித்திரம் பிடிக்க போகிறது..3 ராசிகளுக்கு சிக்கல்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?
புதன் பகவான் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது புதன் பகவான் அவரோடு இணைகின்றார். புதன் பகவானின் இந்த பயணத்தால் தரித்திர யோகம் உருவாகியது. இந்த யோகத்தால் சில ராசிகள் மிகவும் கஷ்டப்படப் போகின்றனர்.
நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான் இவர் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர். கல்வி, அறிவு, காதல், உடல்நலம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார்.
புதன் பகவான் சில சமயங்களில் எதிர்பாராத நேரத்தில் பாதகங்களை கொடுக்கக்கூடியவர். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து ராசிகளுக்கு பலன்கள் கிடைக்கும். வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார்.
புதன் பகவான் ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது புதன் பகவான் அவரோடு இணைகின்றார். புதன் பகவானின் இந்த பயணத்தால் தரித்திர யோகம் உருவாகியது. இந்த யோகத்தால் சில ராசிகள் மிகவும் கஷ்டப்படப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி ராசி
புதன் பகவானால் மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்கள் செயல்படுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு இது சாதகமான சூழ்நிலை கிடையாது.
தனுசு ராசி
உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை புதன் பகவான் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் எதிரிகளால் உங்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். தோல் மற்றும் பாத வியாதிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மன இறுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தினரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9