தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதனிடம் சிக்கி சிதைய போகும் ராசிகள்

Lord Mercury: புதனிடம் சிக்கி சிதைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 12:39 PM IST

புதன் பகவானிடம் கஷ்டப்படப் போகும் ராசிகள் இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் புதன் பகவான் குறுகிய காலத்தில் இடம் மாறி மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கக்கூடியவர்.

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். தற்போது புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ஜாதகத்தின் மூன்று மற்றும் 12 ஆம் வீட்டில் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்கு அவர் செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு செலவு அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பண இழப்பு அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சில மதிப்புமிக்க பொருட்களை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். சில சவாலான சூழ்நிலைகள் உருவாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. விஷ்ணு பகவானை வழிபட்டு பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel