தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆபத்து அதிரடியாக வருகிறது.. தலைவராக மாற்றப் போகும் சூரியன்.. மேஷத்தில் சிக்கும் ராசிகள்

ஆபத்து அதிரடியாக வருகிறது.. தலைவராக மாற்றப் போகும் சூரியன்.. மேஷத்தில் சிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 07, 2024 02:28 PM IST

Lord Surya: சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

தற்போது சூரிய பகவான் குரு பகவான் ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொண்டு காரணத்தினால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் செவ்வாய் பகவான் என்று ஆசியான மேஷ ராசியின் நுழைகின்றார். இந்த நிகழ்வு ஒரு வருடத்திற்கு பிறகு நடக்க உள்ளது.

சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்வி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு பல்வேறு விதமான வழிகளில் இருந்து தீங்குகள் விளைவிக்க அதிக பேர் வருவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் கவனமாக இருங்கள்.

மீன ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சொந்த வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை சரியாக கையாள வேண்டும். குடும்பத்தில் பேசும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு வாழ்க்கை துணையால் மன உளைச்சல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது நல்லது.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துங்கள் இல்லை என்றால் பணம் விரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும் மற்றவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்