தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: புதன் ஜூலை பண மழையை தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது.. ராஜயோகம்

Money Luck: புதன் ஜூலை பண மழையை தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது.. ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 09:47 AM IST

Lord Mercury: ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் ஜூலை பண மழையை தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது.. ராஜயோகம்
புதன் ஜூலை பண மழையை தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது.. ராஜயோகம்

புதன் பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்குப் பிறகு ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் ராசியான கடக ராசிக்கு சொல்லுகிறார். இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்த ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் புதன் பகவானால் யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் பல்வேறு விதமான நன்மைகள் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வாய்ப்புக்கான சூழ்நிலைகள் ஏற்றவாறு அமையும். வேலை தொடர்பாக நீங்கள் பல்வேறு விதமான பயணங்கள் செய்ய வேண்டியவரும். இந்த பயணம் உங்களுக்கு நல்ல நிதி நிலைமையை உண்டாக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு முடிவடையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். யோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

 உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு யோகங்களை தரப்போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel