மேஷத்தில் விரட்டி விரட்டி அடிக்க போகும் சூரியன்.. தலையடடி தப்பாது.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் நீங்கள்தான்
சூரிய பகவானின் இடமாற்றத்தின் தாக்கம் அல்லது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில ராசிகள் அதிர்ஷ்டம் சில ராசிகள் அசுப பலன்கள் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பகவானின் இடமாற்றும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டவராக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது எடுத்த மாற்றக்கூடியவர். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியில் நுழைந்துள்ளார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து இந்த மேஷ ராசிக்கு சூரிய பகவான் செல்வார்.
சூரிய பகவானின் இடமாற்றத்தின் தாக்கம் அல்லது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சில ராசிகள் அதிர்ஷ்டம் சில ராசிகள் அசுப பலன்கள் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய பகவானின் இடமாற்றும் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசிகள் நுழைகின்றார். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களுடைய எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருங்கள்.
மீன ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் செல்கின்றார். இதனால் உங்களுடைய நடத்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது உங்களுடைய பேச்சால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அது மிகப்பெரிய விரிசல்களை ஏற்படுத்தும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற விமர்சனங்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிக கவனம் செலுத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிகிச்சையை பெற்றுக்கொண்டால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9