தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: மிருகசீரிஷத்தில் புகுந்த சுக்கிரன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. நிதி நிலைமையில் மாற்றம்

Money Luck: மிருகசீரிஷத்தில் புகுந்த சுக்கிரன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. நிதி நிலைமையில் மாற்றம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 04:04 PM IST

lord Venus: ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் சுக்கிரன் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் ஜூன் பதினெட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.

மிருகசீரிஷத்தில் புகுந்த சுக்கிரன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. நிதி நிலைமையில் மாற்றம்
மிருகசீரிஷத்தில் புகுந்த சுக்கிரன்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. நிதி நிலைமையில் மாற்றம்

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ராசி மாற்றம் மட்டுமில்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சுக்கிரன் தனது சொந்தமான ராசி ஆன ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் சுக்கிரன் கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். வரும் ஜூன் பதினெட்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கும் நல்ல லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல நிதி நிலைமையை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அதே போல பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் வழக்கத்தை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரக்கூடிய சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல ஆடம்பர வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9