தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது

தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
May 05, 2024 05:01 PM IST

Venus: சுக்கிர பகவான் என் ராசி மாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். சுக்கிரன் மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்குப் பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.

சுக்கிர பகவான் என் ராசி மாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் ஒத்துழைப்பு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதீத சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அதிக செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்பினால் அது உங்களுக்கு சரியான தருணமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். மாணவர்களால் நல்ல வெற்றி தேர்வில் உண்டாகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel