Surya Peyarchi Luck: சூரிய பணமழையை அனுபவிக்க போகும் ராசிகள் இவர்கள்தான்!
சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சூரிய பகவான் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவானின் இடமாற்றத்தின் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்ற காரணத்தினால் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போது சூரிய பகவான் சனிபகவானின் கும்ப ராசியில் புகுந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்த ராசியாகும். இதனால் சூரியன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அதே சமயம் ராகு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இரண்டு கிரகங்களும் சூரியனுக்கு இரண்டு புறமும் அமைந்துள்ளனர். இதனால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள இந்த ராஜ யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி
சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வணிகம் விரிவு அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
சூரிய பகவானின் ராஜயோகம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காரிய தடைகள் அனைத்தும் விலகும்.
கும்ப ராசி
சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் நல்ல ஆதாயம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9