தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Sign People Who Are Going To Fully Enjoy The Luck Of Lord Venus

சுக்கிரன் தரும் திருமண பாக்கியம்.. இடமாற்றத்தில் பணமழை.. வருகிறது யோகம்.. அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 12:45 PM IST

Lord Venus: சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் சுக்கிர பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜபாளையத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி மற்றும் சுக்கிரன்
சனி மற்றும் சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவான் என்ற ராசிக்கான கும்ப ராசியில் நுழைந்தார். சனி பகவானும் சுக்கிர பகவானும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் சுக்கிர பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜபாளையத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு செய்யும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்னேற்றத்திற்கான திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel