Rahu Ketu Transit: ராகு பகவானால் அரசனாக மாறப்போகும் ராசிகள்
ராகு கேது இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுபவர்கள். ராகு மற்றும் கேது இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ராகு கேது இவர்கள் இருவருக்கும் சொந்த ராசி என்பது கிடையாது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் மூன்றாம் கட்டத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் கட்டத்திலும், ஜனவரி ஒன்றாம் தேதி அன்று நுழைந்தனர். இவர்களுடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
ராகு மற்றும் கேது உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளனர் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கைத் துணையால் முன்னேற்றம் உண்டாகும். திருமணத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
மேஷ ராசி
ராகு கேது இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீங்கள் பணக்காரராகும். யோகம் உங்களுக்கு கிடைக்க உள்ளது. உடல் ஆரோக்கியத்தை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கும்ப ராசி
ராகு கேது உங்களுக்கு சிறப்பாக பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பல்வேறு விதமான பண பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்