Guru Money: குரு குறி வைத்து விட்டார்.. இந்த ராசிகளுக்கு பண மழை
Guru Bhagavan: குரு பகவானால் நல்ல பலன்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். நவகிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகிறார். எப்போதும் சுப பலன்களை கொடுக்கும் குரு பகவான் அவ்வப்போது சில சிக்கல்களை கொடுப்பார். அது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அமைகின்றது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
நவக்கிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். மே 6ஆம் தேதி அன்று அஸ்தமனம் ஆகிறார். அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார்.
வரும் மே மாதம் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிக சுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடக ராசி
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் இருக்கக்கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
சிம்ம ராசி
குருபகவானின் சுப பலன்களை நீங்கள் பெறப் போகின்றீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைய உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி ராசி
குருபகவானின் அதிர்ஷ்டத்தை நீங்கள் முழுமையாக பெற போகின்றீர்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு சுகமாக அமைய உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. விருப்பங்கள் நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். குரு பகவானின் தாக்கம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9