தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis In Which Shani Bhagavan Gets Yoga

Sani: சனி யோகத்தை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 05:03 PM IST

சனி பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பகவான்
சனி பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

கடின உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனிபகவானின் பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.

இருப்பினும் இந்த புத்தாண்டு 2024 ஆம் ஆண்டில் சனிபகவான் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றார். எந்தெந்த ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் இந்த புத்தாண்டில் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கள் பரிவர்த்தனைகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சனி பகவானால் உங்களுக்கு அனைத்து விதமான நல் பலன்களும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி

 

சனிபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். குடும்பத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். திடீர்னு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.